search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் தப்பி ஓட்டம்"

    • மருத்துவ பரிசோதனைக்காக 3 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர்.
    • தப்பி ஓடிய சதீஸ்குமார் தனது நண்பருக்கு உடனடி தகவல் கொடுத்து காரில் ஏறி சென்றார்.

    திண்டுக்கல்:

    தேனியில் இருந்து திண்டுக்கல்லுக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போதைப்பொருள் கடத்தல் நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு செம்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

    அப்போது தேனியில் இருந்து திண்டுக்கல் வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் வந்த கம்பத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் (25), நவீன்குமார் (30), பாண்டீஸ்வரன் (28) ஆகிய 3 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக தயார்படுத்தினர்.

    மருத்துவ பரிசோதனைக்காக அவர்கள் 3 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர்.

    அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சதீஸ்குமார் என்பவர் தப்பி ஓடினார். பாதுகாப்புக்காக நின்று கொண்டு இருந்த நுண்ணறிவு பிரிவு போலீஸ் நாகலிங்கம் (35) என்பவர் தடுக்க முயன்றபோது அவரையும் தாக்கி கீழே தள்ளி விட்டு ஓடினார்.

    இதில் நாகலிங்கம் படுகாயமடைந்தார். தப்பி ஓடிய சதீஸ்குமார் தனது நண்பருக்கு உடனடி தகவல் கொடுத்து காரில் ஏறி சென்றார். இதனைத் தொடர்ந்து அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

    பிடிபட்ட மற்ற 2 பேர்களான நவீன்குமார் மற்றும் பாண்டீஸ்வரன் ஆகிய இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • 2 மாதங்களுக்கு பிறகு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
    • பஞ்சாயத்தில் சிறுமிக்கு சிவக்குமார் ரூ.10 ஆயிரம் தருவதாகவும், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் செந்துலுடுவை சேர்ந்த சிறுமி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கிராம தன்னார்வலராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறுமி பள்ளிக்கு சென்று விட்டு அவரது பாட்டி வீட்டிற்கு வந்தார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த சிவகுமார் சிறுமியிடம் ஆதார் அட்டை கேட்டு வீட்டிற்குள் சென்றார்.

    அப்போது வலுக்கட்டாயமாக சிறுமியை பலாத்காரம் செய்தார். 2 மாதங்களுக்கு பிறகு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியின் தாய் அவரை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். சிறுமியை பரிசோதித்த டாக்டர் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து செய்தார்.

    பஞ்சாயத்தில் சிறுமிக்கு சிவக்குமார் ரூ.10 ஆயிரம் தருவதாகவும், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தார்.

    இதையடுத்து நேற்று முன்தினம் சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து வந்தது. 2 பேரின் உறவினர்களும் திருமண மண்டபத்தில் குவிந்தனர்.

    திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிவக்குமார் கலந்து கொண்டார். அதிகாலை திருமண மேடைக்கு வரவேண்டிய சிவக்குமார் தலைமறைவானார்.

    நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அவரது அறைக்கு சென்று பார்த்தபோது சிவக்குமார் அங்கு காணவில்லை.

    மாப்பிள்ளையை பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் திருமண களைகட்டி இருந்த வீடு சோகத்தில் மூழ்கியது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் அந்தந்த பகுதிகளில் சி.சி.டி.வி.பதிவுகளை ஆய்வு செய்தனர்.
    • தலைமறைவான ராம்கியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஒதியஞ்சாலை போலீஸ் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் நடந்து வந்தது.

    இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் அந்தந்த பகுதிகளில் சி.சி.டி.வி.பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் கிடைத்த தகவலின் பேரில் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த ராம்கி (வயது21) என்ற வாலிபரை ஒதியஞ்சாலை போலீசார் பிடித்து நேற்று விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    போலீஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த ராம்கி திடீரென போலீஸ் நிலையத்தில் இருந்து நைசாக வெளியேறி சாலையில் ஓடினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்றனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தப்பிச்சென்று விட்டார்.

    தலைமறைவான ராம்கியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    போலீஸ் நிலையத்திலிருந்து வாலிபர் தப்பி ஓடியதும் அவரை போலீசார் விரட்டிச் சென்றும் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் போலீசார் திரும்பியதை கண்ட பொது மக்கள் புதுவை போலீசாரின் நிலையை கிண்டலாக பேசினர்.

    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர்/ ரமேஷ் இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு வாலிபர் வந்து கொண்டிருந்தார்.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர்/ ரமேஷ் இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு வாலிபர் வந்து கொண்டிருந்தார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் அழைத்து விசாரிக்க முயன்ற போது, அந்த வாலிபர் பையை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த பையை காவல் நிலையம் எடுத்துச் சென்று சோதனை செய்ததில், அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அந்த கஞ்சா பையை போட்டுவிட்டு தப்பி ஓடிய வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • குளியலறையில் இருந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
    • ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 25). எலக்ட்ரீசியன். இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்கு சம்பவத்தன்று நள்ளிரவு சென்று குளியலறையில் இருந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அப்போது சிறுமியின் தாய் சந்தேகமடைந்து வீட்டின் குளியல் அறையை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.அப்போது ஆகாஷை சிறுமியின் தாய் பிடிக்க சென்றபோது அவரை தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்ததின் பேரில் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. 

    • கல்வராயன் மலை அடிவாரம் அம்மாபேட்டை கிராமம் தண்ணீர் டேங் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • வாலிபர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கல்வராயன் மலையில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வருவதாக கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கல்வராயன் மலை அடிவாரம் அம்மாபேட்டை கிராமம் தண்ணீர் டேங் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மூட்டைகளுடன் வந்தார். வாலிபர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். உடனே போலீசார் அந்த மூட்டைகளை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அதில் 60 லிட்டர் சாராயம் இருந்தது. இதையடுத்து சாராயத்தையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகிறார்கள்.

    ×